தேசிய அடையாள அட்டையில் பயோமெட்ரிக் தகவல்கள்

இனிவரும் காலங்களில் புதிய தேசிய அடையாள அட்டை தயாரிப்பில், சுயவிபர தகவல்களுடன் பயோமெட்ரிக் தகவலும் (கைரேகை, ரத்த வகை) சேர்க்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.