புளியம்பழம் பொறுக்கி உடைத்து விற்று பேரப்பிள்ளைகளை வளர்க்கும் வயோதிப பெண்

-கிளிநொச்சி நிருபர்-

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில், 75 வயதிற்கும் அதிகமான வயதுடைய வயோதிப பெண்ணொருவர், இருப்பதற்கு  நிரந்தர வீடும் இன்றி எந்தவித பாதுகாப்பும் இல்லாத ஒரு தற்காலிக கொட்டகையில் வசிக்கிறார்.

ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாத நிலையில் தற்போது புளியம் பழத்தினை பொறுக்கி, அதை உடைத்து விற்று, அதில் வரும் பணத்தில் தனது இரண்டு 18 வயதிற்கும் மேற்பட்ட வயதுடைய பேரப்பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்.

அவரது இரண்டு பேரப்பிள்ளைகளின் பெற்றோர்களும் யுத்தத்தில் இறந்துவிட்டனர்.

அவருக்கு கடந்த ஜந்து வருட காலமாக இரண்டு கண்பார்வையும் இழந்த நிலையில், பெரும் கஸ்ட நிலையில் வாழ்ந்து வரவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக ஒரு வேளை உணவை உண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.