கால்நடை தீவன உற்பத்திக்காக தானியங்களை இறக்குமதி செய்ய அனுமதி

கால்நடைத் தீவன உற்பத்திக்காக 25,000 மெற்றிக் தொன் சோளம் அல்லது பிற பொருத்தமான தானியங்களை இறக்குமதி செய்வதற்கு, விவசாய அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் சிபாரிசின் அடிப்படையில், சோளம் அல்லது ஏனைய தானியங்களின் இருப்புக்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கால்நடை தீவன உற்பத்திக்காக வருடாந்தம் சுமார் 600,000 மெற்றிக் தொன் சோளம் தேவைப்படுவதாக அமைச்சரவை தீர்மான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வருட இறுதிக்குள் 225,000 மெற்றிக் தொன் சோளத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான உணவு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கால்நடை தீவன விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.