யாழ்.கடற்கரையில் கரையொதுங்கிய 42 கிலோகிராம் கேரளா கஞ்சா

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் 42 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவத்தினரால் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை சக்கோட்டை பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அங்கு சென்ற இராணுவத்தினர், கரையொதுங்கிய நிலையில் இருந்த 42 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கபட்டவை மதுவரித் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளை மதுவரித் திணைக்களத்தினர் பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.