கிழக்கு மாகாணத்தில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள்

-கல்முனை நிருபர் –

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களமும், யூலிட் நிறுவனமும் இணைந்து க.பொ.த.சாதாரண தரம், க.பொ.த.உயர்தரம் ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தொழிலுக்கான திறவுகோல் எனும் தொனிப்பொருளில் கல்வி, தொழில் வழிகாட்டல் ஆலோசணை கருத்தரங்குகளை பாடசாலை மட்டத்தில் நடத்திவருகின்றது.

பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் யூலிட் நிறுவனத்தின் அனுசரணையில் தொழிலுக்கான திறவுகோல் கருத்தரங்கு கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையின் நிர்வாகப்பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையின் முகாமைத்துவ பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாசா, அதிபர் க.செல்வராசா, திறன் வழிகாட்டல் பணிப்பாளர் நிரோஸ் சமிந்த ஹப்புஆராச்சி, வழிகாட்டல் ஆலோசணை சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பி.துஷ்யந்தன் ஆகியோர் உட்பட தொழில் வழிகாட்டல் ஆலோசணை உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு மாணவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறான கற்கை நெறிகளை தெரிவு செய்யவேண்டும்,  தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளை எங்கு பெற்றுக் கொள்ளலாம்,  விரும்பிய துறையை, தொழிலை தெரிவு செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் என்பன தொடர்பில் வளவாளர்களினால் மாணவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.