ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2 சதவீதமாக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின்படி ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஜூலை மாதத்தில் 82.5 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 84.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அத்துடன் உணவு அல்லாத பொருட்களின் விலை 57.1 சதவீதம் உயர்ந்துள்ளது.

நீர் மின்சாரம் எரிவாயு மற்றும் எரிபொருள் வகையைச் சேர்ந்த பணவீக்கமும் 32.1 சதவீதம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.