இன்று எரிபொருள் விலையில் திருத்தம்?

இன்று திங்கட்கிழமை எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென தகவல்கள் தெரவிக்கின்றன.

இது இந்த மாதத்தில் ஏற்படுத்தப்படும் இரண்டாவது விலை திருத்தமாக அமையும்

சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்துக்கமைய, உள்ளூரில் எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில்  எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்திருந்தது.

அதற்கமைய, ஜீலை முதலாம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த எரிபொருள் விலை திருத்தத்தின்போது பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலையை மாத்திரம் 10 ரூபாவினால் குறைத்து புதிய சில்லறை விலையை 430 ரூபாவாக அறிவித்திருந்தது.