நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

நாளாந்த மின்வெட்டு நேரம் இன்று திங்கட்கிழமை முதல் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் தினசரி 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதி மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதி மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளதாகவும், தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது கோளாறை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.