நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல்

இந்திய – பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஷ்டி தென்மேற்கு நியூயார்க் மாநிலத்தில் மேடையில் நிகழ்வொன்றில் விரிவுரை வழங்கவிருந்தபோது கத்திக்குத்திற்கு ஆளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரவித்துள்ளன.

ருஷ்டி மற்றும் நேர்காணல் செய்பவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர், நாவலாசிரியர் ருஷ்டியை 15 தடவைகள் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சல்மான் ருஷ்டிக்கு கழுத்தில் ஒரு கத்தி குத்து காயம் ஏற்பட்டது, அதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதேவேளை ருஷ்டியுடன் நேர்காணலுக்கு வந்தவருக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட்டது.

ஹாடி மாதர் என்ற சந்தேகநபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.