பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் இருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

87

எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் இருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

6600 லீற்றர் டீசல் கொண்ட பௌசரை மீகொட பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைக்கு விற்பனை செய்ய முற்பட்ட சம்பவத்தில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகளின் போது இச்சம்பவத்தில் உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சாரதி மற்றும் சாரதி உதவியாளர் உட்பட நால்வர் இச்சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.