ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

61

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் இன்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் தெரிவித்தனர்.

தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த நபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 03 கிராம் 730 மில்லிகிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா-நடுவூற்று பகுதியைச் சேர்ந்த இமாம்தீன் முஹம்மட் (32வயது) எனவும் தெரிய வருகின்றது.

மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்ற நிலையில், கணவர், சூது விளையாடுதல் மற்றும் போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த நபரை சோதனையிட்ட போதே அவரிடம் இருந்து ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், நாளை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.