நாட்டில் மேலும் நான்கு கொவிட் மரணங்கள் பதிவு

40

நாட்டில் நேற்று வியாழக்கிழமை மேலும் 4 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,578 ஆகும்.

இதேவேளை, நாட்டில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 666,232 ஆகும்.