ஒரு மூடை யூரியா பசளையை 15,000 ரூபாவிற்கு வழங்க தீர்மானம்

76

ஒரு மூடை யூரியா பசளையை 15,000 ரூபாவிற்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

தேயிலை, சோளம், உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்காக இவ்வாறு யூரியா பசளை 15,000 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது.

நெற் செய்கைக்காக ஒரு மூடை யூரியா பசளை 10 ஆயிரம் ரூபாவிற்கு வழங்கப்பட்டது.

எனினும், தேயிலை, சோளம், உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்காக ஒரு மூடை யூரியா பசளையை 15 ஆயிரம் ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.