லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது

258

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 12.5 கிலோகிராம் கொள்கலன் ஒன்று சுமார் 200 ரூபாவினால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்திருந்த நிலையில், தற்போது எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் இந்த விலைகுறைப்பு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.