மின்வெட்டு இல்லை

145

வார இறுதி நாட்களில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இருக்காது என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை இரவு ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு அமுலில் இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருக்கும்.

நேற்றுமுன்தினம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 57.17% நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் கணிசமான மழைவீழ்ச்சியினால் எதிர்காலத்தில் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.