ஐந்து நாட்களும் பாடசாலைகள் இடம்பெறும்

154

இம்மாதம் 8ஆம் திகதி முதல் வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஐந்து நாட்களும் திறக்கப்படும் என வடமாகாண கல்விச் செயலாளர் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார்.

போக்குவரத்து வசதிகள் மிகவும் மோசமாக உள்ள மாகாணங்களில் பாடசாலைகளை நடாத்துதல் தொடர்பாக அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கூடி கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

இதேவேளை, எரிபொருள் தேவைப்படும் ஆசிரியர்களுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை 6 மணி முதல் 8 மணி வரை சிரமம் இன்றி எரிபொருளை பெற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண கல்விச் செயலாளர் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.