100 நாட்கள் செயல்முனைவின் ஐந்தாம் நாள் போராட்டம் இன்று மட்டக்களப்பில்

50

“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் ஐந்தாம் நாள் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காந்தி பூங்காவில் நடைபெற்றது.

இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், செயற்பாட்டாளர் என 150 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையை வேண்டி நின்றனர்.

இதன்போது மக்களின் அவல வாழ்வை வெளிக் கொணரும் வகையிலான வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.

அத்தோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டோரால் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று மனித உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை 100 நாட்கள் செயல் முனைவின் நான்காவது நாள் போராட்டம் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.