ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

34

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.