அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

153

பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய,

600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பு 400 ரூபாவாகவும்

330 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனி  270 ரூபாவாகவும்

190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 135 ரூபாவாகவும்

550 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டு 400 ரூபாவாகவும்

200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு 150 ரூபாவாகவும்

1900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாய்  1300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக புறக்கோட்டை வரத்தக சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஜ.தேவபிரான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய பொருட்களின் மொத்த விலை 40 முதல் 50 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

.