அதிகளவு இ.போ.ச பேருந்துகள் சேவையில்

18

தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் காரணமாக, இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை அதிகளவில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

போதிய எரிபொருள் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் சங்கங்கள் நேற்று வியாழக்கிழமை இரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.