‘மெய்யெனப் பெய்யும் பொய்’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு

43

கவிஞர் கவிக்கூத்தனின் (க.பிறேம்சங்கர்) ‘மெய்யெனப் பெய்யும் பொய்’ எனும் கவிதைத் தொகுப்பு நூல் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

நேற்று மாலை 3 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் பொறியியலாளர் வே.கணேஸ்வரா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்து கொண்டு கவிதை நூலினை வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில், விருந்தினர்களாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சிவபூமி தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ் இந்துக்கல்லூரி அதிபர் ர.செந்தில்மாறன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.