பேருந்து கட்டணங்கள் குறைப்பு : முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்

37

11.14 வீதத்தால் குறைக்கப்பட்ட பஸ் கட்டணம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.

அதன்படி, இதுவரை 38 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் இன்று முதல் 34 ரூபாவாக குறைக்கப்படுகிறது.

பேரூந்துகளில் அதிக பணம் வசூலித்தால் 1955 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

மீண்டும் பரவியுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக, பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, போதிய எரிபொருள் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் சங்கங்கள் நேற்று வியாழக்கிழமை இரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.