கசிப்புடன் இரண்டு பெண்கள் கைது

59

-யாழ் நிருபர்-

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் இன்று புதன்கிழமை இரண்டு பெண்கள் கசிப்புடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சுழிபுரம் மத்தி பகுதியில் 5000 மில்லி லீற்றர் கசிப்புடன் 68 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அதே பகுதியில் 95000 மில்லிமீட்டர் கோடாவுடன் 41 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படும் தருவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.