மது அருந்த கடன் வாங்கிய கணவன் : காரணம் கேட்ட மனைவி கொலை

101

பொலன்னறுவை-லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை நாளை மறுதினம் சனிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்துவதற்கு வாங்கிய கடன் தொகை தொடர்பாக மனைவி தொடர்ந்து வினவியதால் ஏற்பட்ட வாக்குவாதமே கொலைக்கான காரணம் என அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் தன்னை தொடர்ந்து குற்றம் சாட்டியதாகவும், கோபத்தின் காரணமாக கோடரியால் அவரை தாக்கியதாகவும் சந்தேக நபர் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கொலைக்குப் பின்னர் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலைக்கு பயன்படுத்திய கோடரியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.