பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இந்துகலை மேற்பிரிவில் ஆணொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை காலை விறகு சேகரிக்கச் சென்ற இந்துகலை பகுதியை சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று அதிகாலை விறகு சேகரிக்கச் சென்ற வேளையில் உயிரிழந்துள்ளார்.
தோட்டத்தில் கடமை புரிபவர்களினால் குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்லகெடுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.