குழந்தையின் தலையை தாயின் வயிற்றில் வைத்து தைத்த விபரீதம்

229

பாகிஸ்தானில் பிரசவத்தின் போது துண்டான சிசுவின் தலையை  தாயின் வயிற்றுக்கு உள்ளேயே வைத்து தைக்கப்பட்ட, சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தார்பார்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த 32 வயது பெண் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மகப்பேறு மருத்துவர் இல்லாததால்  ஊழியர்கள் சிலர் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்துள்ளனர்.

இதன்போது, அவர்களின் அலட்சியத்தினால் குழந்தையின் தலை துண்டாக்கப்பட்டு, பின்னர் சுகாதார ஊழியர்கள் தலையை தாயின் வயிற்றிலேயே வைத்து தைத்துள்ளனர்.

இதன் காரணமாக, குறித்த தாய் ஆபத்தான நிலையில் உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், தலை உள்ளே சிக்கிக்கொண்டதால், தாயின் கருப்பை உடைந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மீண்டும் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தலை வெளியே எடுக்கப்பட்ட நிலையில், தற்போது அப்பெண் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சிந்து மாகாணத்தின் சுகாதாரத் துறை இயக்குனர் ஜூமான் பஹோடோ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார், என தெரிவிக்கப்படுகின்றது.