ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தடை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக உக்ரைன் தடை விதித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதன.

புட்டினுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை விதிப்பதற்கான ஆணையில், உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கைச்சாத்திட்டுள்ளார்.

உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சபையின் முடிவை இயற்றும் இதற்கான ஆணையில் அவர் கையொப்பமிட்டுள்ளது.

சொத்துக்களை முடக்குதல் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளுக்குத் தடைவிதித்தல் என்பன இந்த ஆணையில் உள்ளடங்குகின்றது.

மேலும், இந்தத் தடையானது, க்ரெம்ளின் மாளிகை பேச்சாளர், ரஷ்ய பிரதமர், வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், உப பிரதமர், அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.