கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி மகிழ்ச்சியில் உலக மக்கள்!

12292

-ச.சந்திரபிரகாஷ்-

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட  கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்று வியாழக்கிழமை மனித உடலில் முதல் தடவையாக சோதனைக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக , லண்டன் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு மாநில செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தடுப்பூசியான உலகத்தையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து  அனைத்தையும்  தூக்கி எறியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான தடுப்பூசியை உருவாக்கிய உலகின் முதல் நாடு என்பதில் தாம் பெருமிதம் அடைவதாகவும் , இன்று வியாழக்கிழமை முதல் மக்களுக்கு வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் தெரித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியானது பொதுவான குளிர் வைரஸின் பதிப்பிலிருந்து  சிம்பன்ஸிகளை ( குரங்கு வகை ) பாதுகாக்கும் அடினோவைரஸ் மரபணு ரீதியாக மாற்றப்பட்டு இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உயிரணுக்களை பாதிக்க கொரோனா வைரஸ் கொண்டுள்ள “ஸ்பைக்” புரதங்கள் என அழைக்கப்படும் மரபணுக்களுடன் இந்த தடுப்பூசியானது  எதிர்த்து போராடும் திறன் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் 70 க்கும் மேற்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் தற்போது உலகளவில் வளர்ச்சியில் உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.