15 வயதுடைய சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் காதலன் கைது

282

15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தாயின் காதலன் புத்தல பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவரது தாயார் அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் வசித்து வந்ததாகவும், சிறுமியை பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சிலநாட்களாக வயிற்று வலி இருப்பதாக தெரிவித்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு 44 வயதான சந்தேக நபர் வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.