இன்றைய மின்வெட்டு நேரம் குறைப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு வசதியாக மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும், எதிர்வரும் ஜூன் 01 வரை மாலை 6.30 மணிக்கு மேல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த தினங்களில் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பரீட்சை நடைபெறாத அந்நாட்களில் கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த அனைத்து வலயங்களிலும் 1 மணித்தியாலம் 45 நிமிடம் முதல் 2 மணித்தியாலம் 10 நிமிடம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் மு.ப. 8.00 மணி வரையிலும், கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் மு.ப. 9 மணி வரையிலும் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.