மட்டு .சந்தை கட்டிடத் தொகுதியில் சூரிய மின் பிறப்பாக்கி தகடுகள் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

76

உலக வங்கியின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை பெறும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உரித்தான நகரின் மத்தியில் உள்ள சந்தைக் கட்டிடத் தொகுதியின் கூரையில் இந்த சூரிய மின் பிறப்பாக்கி தகடுகள் (Solar panels)  பொருத்துவதற்கான கள ஆய்வினை இன்று ஞாயிற்றுக்கிழமை மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் முதல்வர் தியாகராஜா சரவணபவன் மோற்கொண்டிருந்தார்.

சுமார் 08 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் இந்த சூரிய மின் திட்டத்தின் மூலம் 40 கிலோ வாட்ஸ் அளவிலான மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாடுகளை கணிசமானளவு குறைக்கும் பொருட்டு இந்த மாற்று திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்கின்றோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலமாக சந்தை தொகுதிக்கு மின்சாரத்தினை பெற்றுக்கொள்வதுடன். மாநகர சபைக்கு வருவாயையும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.