தேசிய பாடசாலைகளுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை வழங்குவது இன்று முதல் இடைநிறுத்தம்

91

மாணவர்களை தேசிய பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்கான அனுமதி கோரும் விண்ணப்பங்களை வழங்குவது இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாடசாலை விடுமுறை முடிந்து கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய அமைச்சர் பதவியேற்றவுடன் அமைச்சு அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சராக அமைச்சர் சுசில் பிரேமஜயத இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.