06 விடயங்களுக்கும் தாம் உடன்படுவதாக:பிரதமர் தெரிவிப்பு

137

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் நாட்டினை முன்னோக்கி செல்லும் பாதை குறித்து முன்வைக்கப்பட்ட கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த 06 விடயங்களுக்கு தாம் உடன்படுவதாக பிரதமர் விக்ரமசிங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், எதிர்கால நடவடிக்கை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வெளிநாட்டு நிபுணர்களின் உதவி தேவைப்படுமாயின் ஏற்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையினால் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் முறைமையை இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றும் நியமிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அனைத்துக் கட்சிகளைக் கொண்ட தேசியப் பேரவையொன்றை நியமிப்பது மிகவும் அவசியமானது என ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.