வடகொரியாவில் அதிகரிக்கும் கொவிட் தொற்று : மேலும் 15 பேர் பலி

77

வடகொரியாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அந்நாட்டில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

வடகொரியாவில் இதுவரையில் 2 இலட்சத்து 96 ஆயிரத்து 180 பேருக்கு நோய் அறிகுறிகள் காணப்படுவதாக, அந்த நாட்டு அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்த நாடு தழுவிய ரீதியில் அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும் என வடகொரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து பகுதியிலும் உள்ள மக்களுக்கு கொவிட்-19 பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, வடகொரியாவில் கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்த தென்கொரியா தடுப்பூசிகளை வழங்க முன்வந்துள்ளது.

எனினும், அதனை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை வடகொரியா  அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.