ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நஹயன் இன்று  வெள்ளிக்கிழமை காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீப நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரது மறைவை தொடர்ந்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 3 நாட்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தனது தந்தை மறைவை தொடர்ந்து  2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஷேக் கலீபா பின் ஜாயத் அல் நஹயன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.