உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரி

உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரியாக பிரான்ஸைச் சேர்ந்த 118 வயதான ‘அன்ட்ரே ‘,கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் உலகின் மிக வயதானவர் என கருதப்பட்ட 119 வயதான ஜப்பானைச் சேர்ந்த கேன் டனேகா அண்மையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 118 வயதான பிரான்ஸ் கன்னியாஸ்திரி அண்ட்ரேவை ‘உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான கன்னியாஸ்திரி’ என கின்னஸ் அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.

அண்ட்ரே ஸ்பானீஷ்   மற்றும் இரண்டாம் உலக போர் காலக்கட்டத்தில் பல்வேறு துறவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.