பீஜிங்கில் மூன்றாவது முறையாக வைரஸ் தொற்றுப் பரிசோதனை

21 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் வசிக்கும் பீஜிங்கில் இன்று சனிக்கிழமை    மூன்றாவது முறையாக வைரஸ் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சீனாவின் குவாங்சோ நகரில் அனைத்து உள்நாட்டு விமானச் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள விமான நிலைய ஊழியர்களுக்கும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஷங்ஹாயில் நடப்பிலுள்ள முடக்கநிலையைத் தவிர்க்க குவாங்சோவில் உள்ள 7 வட்டாரங்களில் பெரிய அளவிலான வைரஸ் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பீஜிங்கில் உள்ள பாடசாலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள குடியிருப்புப் பேட்டைகளில் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பீஜிங்கில் 50க்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முழுமையான கொரோனா தொற்றை துடைத்தொழிக்கும் கொள்கையை பின்பற்றும் சீனா, நோயை கட்டுப்படுத்த கடுமையான முடக்கநிலை, கூட்டு வைரஸ் சோதனை மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை செயற்படுத்தி வருகிறது.