இராட்சத பல்லி மீது கூட்டு பாலியல் பலாத்காரம் நால்வர் கைது

மனிதனுடைய பாலியல் வேட்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மனிதனுடைய அத்துமீறல்கள் விலங்குகள் பறவைகள் என்று ஆரம்பித்து இன்று பல்லி வரை சென்றுள்ளமை பெரும் அதிர்ச்சியையும், அருவெறுப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

இப்படியும் நடக்குமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் இவ்வாறன சம்பவமொன்று மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சஹிதாரி புலிகள் பாதுகாப்பு சரணாலயம் அருகே இராட்சத பல்லியை (வங்காள மானிட்டர்) 4 பேர் ஒன்றாக இணைந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வனதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் கபா பகுதியில் அமைந்துள்ள புலிகள் சரணாலயத்திற்குள், சட்டவிரோதமாக புகுந்த இவர்கள் இந்த அருவெறுக்கத்தக்க செயலை செய்துள்ளனர். இதனையடுத்து சிசிடிவியின் உதவியால் வனத்துறை அதிகாரிகள் குற்றவாளிகளை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சந்தீப் துக்ராம், பவார் மங்கேஷ், ஜனார்தன் காம்டேகர் மற்றும் அக்சய் சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வருடன் வனத்துறை அதிகாரிகளையும் காண்கின்றீர்கள்

இவர்களிடமிருந்த கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்ததில் , 4 பேரும் கூட்டாக சேர்ந்து ராட்சத பல்லியை பலாத்காரம் செய்ததுள்ளதை ஒளிப்பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வனத்துறை அதிகாரிகள், குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர் படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ், அரிய வகை உயிரினமாக வங்காளத்து ராட்சத பல்லிகள் கருதப்படுகின்றன. இதனை தாக்கியவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கொங்கனில் இருந்து கோலாப்பூரின் சந்தோலி கிராமத்திற்கு வேட்டையாட வந்துள்ளமை தெரியவந்துள்ளது.