பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது

71

தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

அதேவேளை உக்ரைன் படைகள், ரஷ்யாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.

இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.

ரஷ்யாவின் அழைப்பை முதலில் மறுத்த உக்ரைன் மீண்டும் ரஷ்யா அழைப்பு விடுத்தபோது, பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது.

அதன்படி, ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியது.

அந்த குழுவினர், ரஷ்ய பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.