அம்பாறை − தமன பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் ஒன்றும், லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது
மேலும், படுகாயமடைந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.