மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப் பாடசாலையில் “காணும் பொங்கல்” திருவிழா

80

-கல்முனை நிருபர்-

மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப்பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் திருவிழா மற்றும் திருவள்ளுவர் பிறந்த தினம் ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

அம்மன் அறநெறிப்பாடசாலையின் அதிபர் தி.நாகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆன்மீக அதிதியாக புதுக்குடியிருப்ப ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கோ.கிரிதரக்குருக்கள்கலந்து கொண்டார். அத்துடன் இந்துப்பிரச்சாரகர் அகரம் செ.துஜியந்தன் உட்பட அறநெறி ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சிவஸ்ரீ கோ.கிரிதரக்குருக்களினால் மாணவர்களுக்கு நல் ஆசியும், சிறப்பு பூசை வழிபாடுகளும் நடைபெற்றன. அத்துடன் திருவள்ளுவரின் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களினால் திருக்குள் ஒப்புவித்தல், திருவள்ளுவர் சிறப்பு பேச்சு, மற்றும் பொங்கல் தினம் பற்றிய பேச்சு ஆகியனவும் நடைபெற்றன.

படப்பிடிப்பு – கல்முனை நிருபர் –

தமிழர்கள் நான்கு வகையான பொங்கலை கொண்டாடி மகிழ்கின்றனர். தைப்பொங்கலுக்கு முதல் நாள் போகிப்பொங்கல், அடுத்தநாள் தைப்பொங்கல், மறுநாள் பட்டிப்பொங்கல், அதற்கு அடுத்தநாள் காணும் பொங்கல் என பொங்கலைப் பொங்கி மகிழ்கின்றனர். இதற்கமைய இன்றைய தினம் அம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் காணும் பொங்கலை பொங்கி மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.