வடமாகாண பொங்கல் விழாவும், இரணைமடு குளத்தின் 102வது ஆண்டுவிழாவும்

118

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 102வது ஆண்டை முன்னிட்டு 102 பானைகளில் பொங்கல் பொங்கி வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து வடமாகாண பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வானது இன்று காலை நெல் வயல்களில் புதிரெடுத்து கொண்டுவரப்பட்டு இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பொங்கல் விழா ஆரம்பமாகியது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக இந்திய துணைத் தூதரகத்தின் பதில் தூதுவர் பங்குபற்றினார்.

இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதரகத்தின் பதில் தூதுவர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் திருலிங்கநாதன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.