வாகரை குஞ்சங் கல் குளத்தில் ஆதிவாசிகளின் பொங்கல் விழா

114

ஆதிவாசிகளின் பொங்கல் விழா வாகரை குஞ்சங் கல் குளத்தில் அவர்களுக்குரிய கலாச்சார நிகழ்வுகளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆதிவாசிகளின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச மக்கள் பங்கு கொண்டு தங்களது கலாச்சார ரீதியில் மண் பானையில் பொங்கல் இட்டு சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதன்போது சிறுவர்கள் மற்றும் பொற்றோர்களுக்கான மரபு ரீதியான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்று போட்டி நிகழ்சிகளில் பங்கு கொண்டு வெற்றி பொற்வர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நீண்ட காலத்திற்குப் பின்னர் மேற்படி கிராம மக்கள் இவ் பொங்கல் விழாவினை மகிழ்சியுடன் கொண்டாடினார்கள். குறித்த நிகழ்வினை லவன் உதவும் கரங்கள் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அமைப்பின் தலைவர் குருசுமுத்து வி.லவன் உரையாற்றும் போது,

ஆதிவாசிகள் எமது இனத்தின் மூத்த தமிழ் குடிமக்களாகும். இப் பகுதிகளில் இருந்து 3000 வருடங்களுக்கு முன்பு மன்னர் காலத்தின் அரச படைகளில் போர் வீராகளாக இருந்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை அவர்களின் மரணத்திற்கு பின்னர் மரணித்த போர் வீரர்களது உடலுடன் முதுமக்கள் காழிகளாகவும், நடுகை கற்கள், பண்பாடுகளாகவும் இன்று கூறப்படும் தொல் பொருட்களாகவும் இறுதி எச்சங்களாகவும் இன்று காணப்படுகிறது.

எனவே இவர்கள் எம்மவர்களால் போற்றப்படவேண்டும் இவர்களது காலச்சாரங்களும் பண்பாடுகளும் எம்மால் பாதுகாக்கப்படவேண்டும் என்றார்.