திருகோணமலையில் வர்த்தக நிலையத்தை உடைத்து திருட்டு

102

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு, திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை-கண்டி பிரதான வீதி ஆண்டாங்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்தைச் சுற்றிப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பி வலையை வெட்டி, கதவை உடைத்து, உள்நுழைந்து சிகரெட் மற்றும் பணம் போன்றவை திருடப்பட்டுள்ளதாக, கடை உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.