முறையற்ற புலம்பெயர்வில் பலியாகும் உயிர்கள்

128
விபத்தில் பலியானோரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறுகின்றன. (படங்கள் : AP News)

கடந்த மாதம் தெற்கு மெக்சிகோவில் முறையற்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு வந்த டிரக் வாகனம் விபத்துக்குள்ளானதில் 56 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மத்திய அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கடந்த மாதம் சியாப்பாஸ் மாகாணத்தில் குடியேறுவதற்காக பயணித்த மக்களை ஏற்றிக்கொண்டு வந்த டிரக் வாகனம் ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் 56 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டுகளில் அப்பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான சாலை விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.

அமெரிக்க எல்லையில் குடியேறும் புலம்பெயர்ந்தோர்கள் அடிக்கடி  ‘கோயோட்ஸ்’ என்று அழைக்கப்படும் மனித கடத்தல்காரர்களினால் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மெக்சிகோவில் கடந்த பத்தாண்டுகளில் வன்முறை மற்றும் விபத்துகளினால் நூற்றுக்கணக்கான முறையற்ற புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.