கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து சிதறியதையடுத்து சுனாமி எச்சரிக்கை

279

பசிபிக் நாடான டொங்காவில், கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்த நாட்டின் சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளன..

இந்நிலையில், அந்த தீவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ளது. எரிமலை வெடித்தபின்னர் கடலில் மிகப்பெரிய அலைகள் எழுந்தன. சுனாமி போன்ற பெரிய அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால், பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

அதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.