COVAX இனால் விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளை நிராகரித்த ஏழை நாடுகள்

83
டிசம்பர் 22, 2021 அன்று நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள Gosa டம்ப் தளத்தில் காலாவதியான AstraZeneca தடுப்பூசிகள் அகற்றப்படுகின்றது (படம்:REUTERS)

உலகளாவிய கொவிட் எதிர்ப்பு திட்டமான COVAX மூலம் விநியோகிக்கப்பட்ட 100 மில்லியனுக்கும் அதிகமான Covid-19 தடுப்பூசிகளை பல ஏழை நாடுகள் கடந்த மாதம் நிராகரித்துள்ளன.

இவ்வாறு விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளின் காலாவதி திகதிகள் முடிந்து விட்டிருந்தமையே இதற்கு காரணம் என UNICEF அதிகாரி ஒருவர் கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

தடுப்பூசிகள் கோரப்பட்ட நிலையில் அவற்றை குறித்த நேரத்திற்கு வழங்காமையினால் அவற்றை சேமித்து வைப்பதில் நாடுகள் சிக்கலை எதிர் நோக்குகின்றன.

தாமதமாக கிடைக்கும் தடுப்பூசிகளை சேமித்து வைக்க முடியாமல் அவற்றின் காலாவதி திகதிகள் முடிவடைந்து விடுகின்றன. இதன் காரணமாக COVAX மூலம் விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளை சில ஏழை நாடுகள் நிராகரித்துள்ளன.

இவ்வாறு நிராகரிக்கப்பட்ட அஸ்ராசெனேக்கா தடுப்பூசிகளை அப்புறப்படுத்தி அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.