வாகன விபத்தில் 16 பேர் பலி

124

தென்னாப்பிரிக்கா-லிம்பொபோ அதிவேக நெடுஞ்சாலையில், இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கையில்,

பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய பேருந்து ஒன்று காருடன் மோதியதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்து வெடித்துள்ள நிலையில், அதில் பயணித்த 16 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.