சோமாலியா கார் குண்டு தாக்குதலில் 8 பேர் பலி

59

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில், நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Avisione என்ற வீதியல் துப்பாக்கி துளைக்காத கார்கள் உள்ளடங்கலான ஒரு வாகனத் தொடரணியை, குறிவைத்து மேற்படி கார் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது

தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் குழு உரிமை கோரியதுடன், இது ‘வெளிநாட்டு அதிகாரிகளை’ குறிவைத்து நடத்தப்பட்டதாக தாக்குதல் என்று ஒரு சுருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.