மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

202

தலவாக்கலை சாந்த ஜனபதய  பகுதியில் இன்று வியாழக்கிழமை மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஏ.எம்.சந்திரலதா (வயது 48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் வீட்டார்கள் தங்களது மரக்கறி தோட்டத்தை மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க மின்சார வேலியை சட்டவிரோதமாக பொருத்தியுள்ளதாகவும், சம்பவ தினமான இன்று தோட்டத்திற்கு செல்லும் போதே குறித்த பெண் மின்சார வேலியில் தவறுதலாக சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்கு செல்லும் போது மின்சாரத்தை துண்டித்துவிட்டு செல்வதாகவும் ,இன்றைய தினம் அதனை துண்டிக்காது மறந்து சென்றதனால் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச வாசிகள்  தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.